சென்னை, ஆவடியை அடுத்த திருநின்றவூர் பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி.. 34 வயதுடைய இவர் அச்சக ஊழியராகப் வேலைபார்த்து வருகிறார்.. இவருக்கு 13 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.. இவரின் மனைவி, மகளுக்கு ஒன்றரை வயது இருக்கும்போதே உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்..
இதையடுத்து தந்தை மூர்த்தியும், அவரின் மகளும் பாட்டியுடன் அதேபகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் மதுவுக்கு அடிமையான மூர்த்தி, நாள்தோறும் வீட்டுக்குக் குடித்துவிட்டு செல்வதாக சொல்லப்படுகிறது.
அந்த வகையில், கடந்த 20ஆம் தேதியும் வீட்டுக்குக் குடித்து விட்டுச் சென்ற மூர்த்தி, நள்ளிரவில் உறங்கிக்கொண்டிருந்த தன்னுடைய மகளுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார். அதேபோல நேற்று நண்பகல் நேரத்தில் குடித்துவிட்டு வந்து வலுக்கட்டாயமாக சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று கத்தியைக் காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி, ஆடைகளைக் களைந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்..
அப்போது சிறுமி சத்தம்போட்டு கத்தியுள்ளார்… உடனே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வீட்டுக்குள் சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் நடந்தது பற்றி சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்..
இதையடுத்து, பாட்டி ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மூர்த்தி மீது புகார் அளித்தார். அந்தபுகாரின் பேரில் காவல் ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார், மூர்த்தியை போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.