விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே இருக்கும் விட்லாபுரம் பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு சசிகுமார் (25) மற்றும் கார்த்திகேயன் (23) என 2 மகன்கள் உள்ளனர். இதற்கிடையே இளையவரான கார்த்திகேயனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.. ஆனால் சசிகுமாருக்கு திருமணம் ஆகவில்லை.. இதனால் தனக்கும் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார் சசிக்குமார்..
அதற்கு தற்போது குடும்ப நிலைமை சரியில்லை, சற்று பொறுமையாக இருக்குமாறு பெற்றோர் கூறியுள்ளனர்.. இந்தநிலையில் கடந்த 21ஆம் தேதி வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்ற சசிக்குமார் வீடுதிரும்பவில்லை.. பின்னர் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நேற்று பிணமாக கிடந்தார்.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தசம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.