Categories
தேசிய செய்திகள்

முதல் திருமணத்தில் 5 பிள்ளைகள்… பின் மறுமணம் செய்த பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி..!!

மனைவியை கணவன் கொன்று விட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தின் மாங்கே என்ற கிராமத்தை சேர்ந்தவர் தான் ஷனி தேவி.. 39 வயதான இவரது கணவரின் பெயர் லல்ஜித்.. இந்த தம்பதியருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.. இந்த நிலையில் கணவர் லல்ஜித்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக தேவி அவரை சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்தார். அதன்பின்னர் கவு மஞ்சி என்ற நபரை தேவி 2ஆவதாக திருமணம் செய்து கொண்டார்.

இதையடுத்து மஞ்சி மற்றும் ஷனி தேவி தம்பதியருக்கு குழந்தை இல்லாத காரணத்தால், இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் தேவியின் முதல் கணவரான லல்ஜித் சில நாட்களுக்கு முன்னதாக அவரை சந்தித்து பேசி கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மஞ்சிக்கு தேவியின் மீது கடும் ஆத்திரம் ஏற்பட்டது.

இதையடுத்து கூர்மையான ஆயுதத்தை எடுத்து கொண்டு தேவியிடம் வந்தார் மஞ்சி.. இதனைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போன தேவியை மஞ்சி சரமாரியாக குத்திக்கொன்று விட்டு, பின் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் தேவி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு தலைமறைவாக இருக்கும் மஞ்சியை தேடி வருகின்றனர்.

Categories

Tech |