Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மருந்து வாங்க போகும் போது… பைக்கை பறிமுதல் செய்த போலீஸ்… மனவேதனையில் தீக்குளித்த இளைஞர்… ஆம்பூரில் பரபரப்பு..!!

ஆம்பூர் அருகே மருந்து வாங்க போகும்போது காவலர்கள் பைக்கை பறிமுதல் செய்ததால் மனவேதனையில் வாலிபர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூர் அடுத்துள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 22 வயது வாலிபர் முகிலன், பேருந்து நிலையம் நோக்கி மருந்து வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார்.. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர்  ஊரடங்கு தடையை மீறி வெளியே வந்தததாக முகிலனை தடுத்து நிறுத்தி பைக்கை பறிமுதல் செய்தனர். இதையடுத்து வாலிபர் பைக்கை தரவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த வாலிபர் மனவேதனையில் பைக்கில் இருந்து பெட்ரோலை பிடித்து சிறிது தூரம் சென்று தனது மேல் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.. இதையடுத்து தீக்காயம் அடைந்த முகிலன் கூறியதாவது, போலீசார் சும்மா போறவன நிக்க வச்சி வண்டிய புடுங்கிட்டாங்க.. என் சாவுக்கு அவங்க தான் காரணம் என்று வலியால் அலறி துடித்தார்..

அதனைத்தொடர்ந்து  காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கவலைக் கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே முகிலனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பைக்கை பறிமுதல் செய்ததற்காக வாலிபர் தீயிட்டு கொண்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீக்குளித்த முகிலனுக்கு லீலாவதி என்ற மனைவியும் 2 பெண் பிள்ளைகளும், ஒரு ஆண் குழந்தையும்  உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |