வருமான வரி தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கவில்லை என்று வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த சில நாட்களாகவே வருமானவரி கட்ட செப்டம்பர் 30 வரை கட்டலாம் என்ற செய்தி சமூகவலைத்தளம் மூலமாக பரவியது. உண்மைத்தன்மை இல்லாத இந்த செய்தியை தடுக்கும் வகையில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு இல்லை என்று வரித் துறை விளக்கம் அளித்துள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு நாளையோடு நிறைவடைகிறது என்றும் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்க செய்யப்பட்டுள்ளதாக தகவல் உண்மையில்லை என்றும் வருமான வரித் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.