ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவர இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டு சென்றது
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்றது. இந்தியா, அமெரிக்கா உட்பட 109 நாடுகளில் கொரோனா பரவியுள்ளது. இந்தியாவில் 43 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரையில் கொரோனா வைரசால் மொத்தமாக 3, 831 பேர் இறந்துள்ளனர். மேலும் 110,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி மற்றும் தென் கொரியாவில் வேகமாக பரவி வருகிறது.
அதேபோல ஈரானிலும் கொரோனா வேகமாக பரவி வருவதன் காரணமாக 237 பேர் உயிரிழந்துள்ளார். மேலும் 7,161 பேர் பாதிக்கப்ட்டுள்ளனர். ஈரானில் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகின்றது. ஈரானில் பல இந்தியர்கள் சிக்கி தவிக்கின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் மீட்கப்படுவார்கள் என்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் ஈரானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமான படையின் சி 17 குளோப்மாஸ்டர் (C-17 Globemaster) என்ற விமானம் இரவு 8: 30 மணியளவில் தெஹ்ரான் (Tehran) புறப்பட்டது. இந்த விமானம் தெஹ்ரானில் அதிகாலை 2 மணியளவில் தரையிறங்கி நாளை காலை 09:30 மணிக்கு இந்தியா திரும்புகிறது.
தெஹ்ரானில் இருந்து அழைத்து வரப்படும் இந்தியர்களை ஹிண்டன் விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புக்குள்ளான ஈரானில் 1200 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கித்தவிப்பதாக கூறப்படுகிறது.
#WATCH Ghaziabad: Indian Air Force's C-17 Globemaster transport aircraft has left for Iran, from Hindon Air Force Station, to bring back Indians citizens stuck there amid #CoronavirusOutbreak pic.twitter.com/AR7SGY3Qdm
— ANI (@ANI) March 9, 2020