Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

BREAKING : போர் பதற்றம்…. ஈரான், ஈராக், செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்.!!

ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த வாரம் அமெரிக்க மேற்கொண்டு வான்வழித் தாக்குதலில் ஈரான் பாதுகாப்புப் படையின் முக்கியத் தளபதியும் அந்நாட்டின் போர் நாயகருமான காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், ஈரான்-அமெரிக்கா இடையேயான மோதலை உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது.

சுலைமானி கொலைக்கு அமெரிக்காவைப் பழிவாங்கியே தீருவோம் என சூளுரைத்திருந்த நிலையில், ஈராக்கில் அமைந்துள்ள அன் அல்- அசாத் ஆகிய இரண்டு அமெரிக்க விமான தளம் மீது ஈரான் இன்று அதிகாலை ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 10 ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் ஈரான், ஈராக், வளைகுடா வான் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது. எந்த வித  அத்தியாவசியமுமின்றி இந்தியர்கள் ஈரான்  நாட்டுக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஈரான், ஈராக் நாட்டுக்கு செல்வதை இந்தியர்கள் முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் ஈராக்கில் வசிப்போர் அந்நாட்டுக்குள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும். ஈராக்  மற்றும் ஈராக்கில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை பாக்தாத், எர்பில் ஆகிய பகுதிகளில் உள்ள இந்திய தூதரகங்கள் செய்கின்றன. ஈராக் நாட்டில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |