Categories
தேசிய செய்திகள்

“இதுவரை இப்படி இல்லை”… வரலாறு காணாத பெரும் சரிவு… இந்திய ரயில்வே துறை கவலை…!!

167 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்திய ரயில்வே சரிவை சந்தித்துள்ளது ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.

2020-21ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ. 1,066 கோடியை இந்திய ரயில்வே தங்கள் பயணிகளுக்கு திரும்ப கொடுத்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சந்திர சேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இவ்விவரங்களை பெற்றுள்ளார். அதன்படி இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், கொரோனா தொற்று காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டு பெரும் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்ற ஏப்ரல் மாதம் ரூ.531.12 கோடி, மே மாதம் ரூ.145.24 கோடி, ஜூன் மாதம் ரூ.390 கோடி என இத்தனை கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயணச் சீட்டை ரத்து செய்தவர்கள் அனைவருக்கும் பணத்தை திரும்ப கொடுத்ததே இந்த இழப்புக்குக் காரணம் என இந்திய ரயில்வேயின் செய்தித் தொடர்பாளர் டிஜே நரேன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 2019-20ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஏப்ரல் மாதம் ரூ. 4,345 கோடி, மே மாதம் ரூ. 4,463 கோடி, ஜூன் மாதம் ரூ. 4,589 கோடி என்ற கணக்கில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |