2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெரும் வீரர்கள் விவரம் வருகிற ஏப்ரல் 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்படவுள்ளது.
2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 30 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்துள்ளது. இதனால் இந்திய அணி 15 வீரர்களாக யாரை தேர்வு செய்யப்போகிறாரகள் என்று மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வருகிற 15-ந்தேதி மும்பையில் அறிவிக்கப்பட இருக்கிறது. மன்னவா ஸ்ரீகாந்த் பிரசாத் தலைமையிலான தேர்வு குழு 15 வீரர்களை தேர்வு செய்து அறிவிக்கிறது. இந்திய அணியின் 4-வது வீரர் வரிசை, ஆல்ரவுண்டர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் , 2-வது விக்கெட் கீப்பர் ஆகியவை தேர்வு குழு கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும். இந்திய அணி உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் ஜூன் 5-ந்தேதி தென்ஆப்பிரிக்காவை எதிர் கொள்கிறது.