இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 2 டி 20 போட்டி மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. 2 டி 20 போட்டியிலும் 2:0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரை வென்றது. இதனையடுத்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியாவும், 3வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளது.
இதனையடுத்து 4வது ஒருநாள் போட்டி மொகாலியில் இன்று 1:30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மாவும்.ஷிகர் தவானும் களம் இறங்கினர். தொடக்கத்திலிருந்தே தவான் ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை பதம் பார்த்தார். ஒருபுறம் ரோஹித் சர்மா அவருக்கு கம்பேனி கொடுக்க மறுபுறம் ஷிகர் தவான் சிறப்பாக விளையாடி வருகிறார்.தற்போது இந்திய அணி 10 ஓவர் முடிவில் 58/0 ரன்களில் உள்ளது. ரோஹித் சர்மா 16 (26) ரன்களும், தவான் 42 (34) ரன்களிலும் விளையாடி வருகின்றனர்.