தேனி மாவட்டத்தில் கஞ்சாவை கேரளாவிற்கு கடத்த முயன்ற 2 இளைஞர்களை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்தி செல்வது தொடர்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் கம்பம் புறவழி சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து மணிகட்டி ஆலமரம் பிரிவில் போலீசார் சென்றுகொண்டிருக்கும் போது 2 இளைஞர்கள் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் கணேசபுரத்தை சேர்ந்த கோபிநாத்(21), சுமன்(36) என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்களிடம் 10 கிலோ கஞ்சா இருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் போலீசார் அந்த 2 இளைஞர்களையும் கைது செய்து கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர்.