கிராம்பு ஒரு நறுமணம் உள்ள மூலிகையாகும் சமையலில் சுவை சேர்க்கவும், பதப்படுத்தவும் பயன்படுகிறது.இதன் நன்மையை குறித்து இந்த தொகுப்பில் காண்போம்!!
அசைவ சமையலில் கிராம்பின் பங்கு மிகுதியானது கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம் ,புரதம் ,வாலடைல் எண்ணெய் ,கொழுப்பு, நார்ப்பொருள் ,மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச், சாம்பல்கள் ,கால்சியம், பாஸ்பரஸ், தயமின் ,ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி, மற்றும் ஏ ,போன்றவை உள்ளன .
கிராம்பின் மொட்டு இலை தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசைகளில் கிராம்பு சேர்க்கப்படுகிறது. இதிலிருந்து சுறுசுறு தன்மையானது வாய்க்கு புத்துணர்வைக் கொடுக்கிறது. பல் வலி ,தேள்கடி, விஷக்கடி, கோழை போன்றவை குணமாக பயன்படுகிறது. வயிற்றில் சுரக்கும் ஜீரண அமிலத்தை சீராகும்.
ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை ஊக்குவிக்கும் .இதனால் ஜீரண கோளாறுகள் நீங்குகிறது. கிராம்பு ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கும் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க உதவும் .உடலைப் பருமடையச் செய்யும் வளர்ச்சியை வளர்ச்சிதை மாற்ற பணிக்கும் சூட்டை சமப்படுத்தவும் ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் உதவும்.
பித்தம் அதிகம் உள்ளவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு கிராம்பை வாயில் போட்டு மெதுவாக மென்று சாறு இறங்கிய பின்னர் துப்பவும் இவ்வாறு செய்தால் பித்தம் குறையும். கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் வாந்தி நிற்கும். நான்கு கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமாகும்.
சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல் கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலை தவிர்க்கக் கூடும் கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர வாய் நாற்றம் ,ஈறு வீக்கம் ,பல்வலி ஆகியவை குணமாகும்.