சமுக வலைதளங்களில் வலம் வரும் ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை குறித்து பிசிசிஐ விளக்கமளித்துள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு முதல் ஊரடங்கு உத்தரவானது தற்போதுவரை ஆறாவது கட்ட நிலையில் அமுலில் உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கணக்கில் கொண்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நடப்பு ஆண்டின் ஐபிஎல் 13 வது சீசன் தொடர் போட்டி வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் எட்டாம் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த 2 தேதிகளை மையமாக கொண்டு சிலர் ஐபிஎல் போட்டிக்கான போலி அட்டவணையை சமூக வலைதளங்களில் தயார் செய்து வெளியிட்டு அதனை வைரலாக்கி வருகின்றனர். அதன்படி, முதல் போட்டியை சென்னை-மும்பை ஆகிய இரு அணிகளுக்கு இடையே நடைபெற இருப்பதாகவும் அதனை தொடர்ந்து மோதிக் கொள்ளும் அணிகளின் தேதி விபரம் என அட்டவணை ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிசிசிஐ சார்பில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ஐபிஎல் போட்டிக்கான தேதிகள் குறித்து எந்த தகவலும் நாங்கள் வெளியிடவில்லை. இது போலியான அட்டவணை விரைவில், அதிகாரபூர்வமாக எந்தெந்த தேதிகளில் எந்தெந்த அணிகளுக்கிடையே போட்டிகள் நடைபெறும் என்ற அட்டவணை பிசிசிஐ தரப்பிலிருந்து வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.