ஈரான் நாட்டில் தடையை மீறி புனித தலங்கள் மற்றும் பள்ளி வாசல்களுக்குச் சென்றதால் அந்நாட்டு அரசு செய்வதறியாது திகைப்பில் உள்ளது.
சர்வதேச அளவில் மிரட்டி வரும் கொரோனா வைரசால் 7,500க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் 1, 90,000-த்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றால் 988 பேர் பலியாகி, 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரான் அரசு கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
முன்னதாக கொரோனா வேகமாக பரவியதை அடுத்து புனித தலங்கள், பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்கு ஈரான் அரசு தடை விதித்தது. இந்த நிலையில் இந்த உத்தரவை மீறியதால் ஈரான் என்னசெய்வதென்றே தெரியாமல் திகைப்பில் உள்ளது. அந்நாட்டின் குவோம் நகரில் பள்ளி வாசலுக்குள் அத்துமீறி நுழைய முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அரசின் கட்டுப்பாடுகளை மதிக்காவிட்டால் உயிர் பலி எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 12 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரானின் பொது சுகாதார வசதிகள் மிகவும் பலவீனமாக இருப்பதால் ஜூன் மாத வாக்கில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 35 லட்சத்தையும் கடந்துவிடும் என்று டெஹ்ரானில் இருக்கும் ஷெரிஃப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அச்சம் தெரிவித்துள்ளது.