Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றம் நோக்கி படையெடுத்த டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள்..!

400 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

பல்கலைக்கழக விடுதிக் கட்டண உயர்வைக் கண்டித்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (JNU) மாணவர்கள், கடந்த மூன்று வாரத்திற்கும் மேலாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 400 விழுக்காடு உரை உயர்த்தப்பட்டிருக்கும் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர்.

Image result for NU fee hike: Students to march to Parliament today, urge other ... JNU's student body has appealed to students

இன்று குளிர் கால கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், மக்களவை உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாணவர்கள் இந்தப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக நாடாளுமன்ற வளாகப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Image result for NU fee hike: Students to march to Parliament today, urge other ... JNU's student body has appealed to students

இந்நிலையில், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மத்திய அரசு உயர்மட்டக்குழு அமைத்துள்ளது. இக்குழுவில், யுஜிசி முன்னாள் தலைவர் வி.எஸ்.சவுகான், யுஜிசி செயலாளர் ரஜினிஸ் ஜெயின் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

Categories

Tech |