ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் வருடம் இது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றி, அதன்பின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறுகையில்,
“இந்த ஒரு ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சிக்கான புதிய பயணத்தின் ஆண்டு ஆகும். ஜம்மு-காஷ்மீரில் வாழும் பெண்களும், தலித் மக்களும் உரிமைபெற்ற ஆண்டு இந்த ஆண்டு ஆகும். மேலும், இந்த ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் உள்ள அகதிகளின் கண்ணியமான வாழ்க்கையின் ஆண்டாகும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.