மருத்துவப்பபடிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் மனசாட்சி படி முடிவெடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதை இந்த கல்வி ஆண்டில் நடைமுறைப்படுத்தக் கோரி மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும் முத்துக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த விவகாரத்தில் சில முன்னேற்றங்கள் நடைபெற்றுள்ளன. 5 அமைச்சர்கள் குழு ஆளுக்குநரை சந்தித்து, தலைமைச் செயலாளருடன் அனைத்து கோணங்களிலும் ஆலோசித்து வருகின்றது.
ஆளுநர் இதுகுறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வரை கால அவகாசம் தேவைப்படுகிறது என்றார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் சட்ட மசோதா சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். சட்டமன்றத்தில் பல கட்ட ஆலோசனை மற்றும் யோசனைக்குப் பிறகு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் பல கோணங்களில் ஆலோசிக்க மேலும் கால அவகாசம் தேவையா என கேள்வி எழுப்பினார் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் பலர் இணைந்து இந்த மசோதாவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.
இதில் கூடுதல் கால அவகாசம் கேட்பது விசித்திரமானது, நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டன. விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதற்கு அரசு தலைமை வழக்கறிஞர்…. இதுபோன்ற முடிவுகளில் நீதிமன்றத்திற்கு ஆளுநர் பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை. இந்த விவகாரத்தில் முடிவெடுக்க போதுமான அளவு கால அவகாசத்தை ஆளுநர் எடுத்துக் கொள்ளலாம் என விதிகள் உள்ளன என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள்… ஆளுநருக்கு காலக்கெடு விதித்து உத்தரவு பிறப்பிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என சட்டம் இயற்றப்பட்டுள்ளது.உலாத்துக்கிடு
இந்த சூழல், அவசரம் அவசியம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு விரைவாக முடிவு எடுக்கப்பட வேண்டும். ஆளுநருக்கு உத்தரவிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் ஏகிடையாது. எழை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவு அவசியமானது. நீதிமன்றத்திற்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் ஆளுநருக்கு இல்லை எனினும், என்ற கருத்தை நீதிபதிகள் தெரிவித்தனர். தொடர்ந்து மனுதாரர் தரப்பில் கர்நாடக அரசு பள்ளி மாணவர்களுக்கு இது போன்ற உலாத்துக்கிடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணையை பிற்பகலுக்கு நீதிபதி ஒத்தி வைத்திருக்கிறார்கள்