மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, அப்போது உள்ள மத்திய அரசு ஹிந்தியை திணித்த போது, நான் சட்டத்தை கொளுத்துகிறேன் என்று சொல்லி, சட்டத்தை கொளுத்துகிற போது நான் சொன்னேன்… என் கையில் இருப்பது இந்தியாவின் அரசியல் சட்டம். அதனுடைய பதினேழாவது பிரிவு. அதற்கு நான் தீயிடுகிறேன், அதற்கு பிறகு நீதிமன்றத்திலே நீதிபதி கேட்டார்,
நீங்கள் அரசியல் சட்டத்தை கொளுத்தினீர்களா என்று ? ஆமாம் நான் கொளுத்தினேன், கொளுத்துனேன். இந்தியாவினுடைய அரசியல் சட்டத்தை கொளுத்தினேன் என்று நான் நீதிபதிக்கு முன்னாலேயே சொன்னேன். ஆனால் அந்த நீதிபதி மனசாட்சி உள்ளவர். தமிழ் உணர்வு மிக்கவர், என்னை விடுதலை செய்துவிட்டார்.இதற்கு முன்பு இருந்த கர்நாடகா அரசு ஹிந்தியை எதிர்க்கிறது. ஆனால் இப்போது இருக்கக்கூடிய கர்நாடக அரசு ஹிந்தியை ஆதரிக்கிறது.
அதற்கு முன்பு இருந்த அரசு ஹிந்தி கூடாது என்று சொன்னது. நாம் தான் கடுமையாக எதிர்த்து போராடிக் கொண்டிருக்கின்றோம். மற்ற மாநிலங்களும், ஹிந்தி பேசாத மாநிலங்களும், இந்தியை எதிர்க்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம், அப்படிப்பட்ட கட்டம் வர வேண்டும்.பிரதம அமைச்சர்.. நாட்டின் தலைமை அமைச்சர்… சமஸ்கிருதத்தை கொண்டு வந்து திணிக்க வேண்டும்..
-என்று கருதுகிற அமைச்சர் ஹிந்தி தான் படிக்க வேண்டும் எல்லோரும், ஹிந்தி தான் எல்லோரும் கற்க வேண்டும், என்று சொல்வதும், அமித்ஷா அவர்கள் ஹிந்தியை கொண்டு வந்தே தீருவோம் என்று கர்ஜிப்பதும்… நான் தெரிவித்துக் கொள்கிறேன்.. நீங்கள் நெருப்போடு விளையாடாதீர்கள், நீங்கள் இந்தியாவினுடைய ஒற்றுமையோடு விளையாடாதீர்கள். இந்தியாவின் ஒருமைப்பாட்டோடு விளையாடாதீர்கள் என தெரிவித்தார்.