Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கந்தூரி விழா….. நாகை வந்த AR ரஹ்மான்….. பள்ளி கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை…!!

நாகையில் கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வுகளை இசை புயல் AR ரஹ்மான்  நேரில் வந்து பார்வையிட்டார். 

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் மற்றும் சந்தனம் பூசும் வைபவத்தில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 463 ஆண்டு நடைபெறும் கந்தூரி விழா. கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ஊர்வலமும், பின் நாகூர் ஆண்டவர் சமாதியில் சந்தனம் பூசும் வைபவமும்  நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும் நாகை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |