மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் தக்பங்களா என்ற பகுதியில் நேற்று வீட்டின் அருகே ரைஹான் மஹல்தர் என்ற சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான்.. அப்போது காலை 11 மணியளவில் அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிறுவனை கடத்தி சென்றுள்ளனர்.
இதையடுத்து கடத்திய அந்தகும்பல் செல்போன் மூலம் ரைஹன் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுத்து, சிறுவன் உயிருடன் உங்களுக்கு வேண்டுமென்றால் 2 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளனர்.. இதற்கு அவ்வளவு தொகை தங்களிடம் இல்லை என்றும், சிறுவனை விட்டுவிடும்படி குடும்பத்தினர் கூறியுள்ளனர். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த இரக்கமற்ற கொலைக்கார கும்பல் சிறிதும் மனிதாபிமானம் இல்லாமல் அதே பகுதியில் சிறுவனைப் கொன்று விட்டு சடலத்தை வீசி சென்றுள்ளனர்.
இந்தநிலையில் சிறுவனின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, அந்த கும்பலை தேடி வருகின்றனர்.