சிரியாவில் வசிக்கும் பூர்வக்குடி குர்து மக்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்கிவருகின்றனர். இதையடுத்து, அந்நாட்டு அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அவர்களை அழிக்கும் நோக்கில் குர்து கிளர்ச்சியாளர்களோடு கைகோர்த்து அமெரிக்கப் படை களமிறங்கியது. சிரியாவில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பல லட்சம் மக்கள் அந்நாட்டைவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தஞ்சமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த மாதம் அந்த இயக்கத்தின் தலைவரான அபு பக்கர், அப்பாவி சன்னி இஸ்லாமியர்களின் உயிர்களுக்கு அச்சுறத்தலாக இருபவர்களிடம் இருந்து மக்களைக் காப்பாற்ற எந்தவித செயலிலும் ஈடுபடுங்கள் என்று சிரியா மதவாத இயக்கங்களிடம் அறிவுறித்தினார்.அதைத் தொடர்ந்து அபு பக்கர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 25 மில்லியன் பரிசாக வழங்குவதாக அமிரிக்க அரசு தெரிவித்தது.
மேலும் கடந்த வாரம் அவரைக் கொலை செய்வதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரிவின் பேரில் அமெரிக்க சிறப்புப் படை அவரை தூண்டில் போட்டு தேடிவந்த நிலையில், தற்போது அவரை சிறப்புப் படையினர் கொன்றுவிட்டதாக, அமெரிக்க ஃபாக்ஸ் (fox) ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.மேலும், இதனை மறைமுகமாக உறுதிப்படுத்தும் வகையில், ‘தற்போது மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துள்ளது’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Something very big has just happened!
— Donald J. Trump (@realDonaldTrump) October 27, 2019