Categories
கிரிக்கெட் விளையாட்டு

சென்னை அணி அபார பந்து வீச்சு….பரிதாப நிலையில் கொல்கத்தா…. 11 ஓவர் முடிவில் 49/6…!!

கொல்கத்தா அணி 11 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 49ரன்களுடன் விளையாடி வருகிறது 

ஐ.பி.எல் தொடரில் 23-வது லீக் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா  நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக  கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.

 

முதல் ஓவரில் தீபக் சாஹர் பந்து வீச்சில் கிறிஸ் லின் 0 ரன்னிலும் அதை தொடர்ந்து  ஹர்பஜன் வீசிய 2 வது  ஓவரில்  சுனில் நரேன் 6  ரன்னில் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த நிதிஸ் ராணா 0, ராபின் உத்தப்பா 11 ரன்னிலும்   தீபக் சாஹர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கும், சுப்மன் கில்லும் பொறுமையாக  விளையாடிய நிலையில் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஹர்பஜன் வசம் பிடிபட்டார். இதையடுத்து ஆண்ட்ரே ரஸெல் களமிறங்கினார்.  சுப்மன் கில் 9 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது பியூஸ் சாவ்லாவும், ரஸெலும் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |