Categories
கிரிக்கெட் விளையாட்டு

சன்ரைசர்ஸ் அணிக்கு 156 ரன்கள் இலக்கு..!!

டெல்லிக்கு கேப்பிட்டல்ஸ் அணி 20  ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 155 ரன்கள் குவித்துள்ளது. 

2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 30 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி ஹைதராபாத் ராஜிவ் காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன்  பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவானும், பிருத்விஷாவும் களமிறங்கினர்..

2வது ஓவரில் கலீல் அகமது பந்து வீச்சில் பிருத்வி ஷா 4 ரன்களில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து தவானும், கலீல் அகமது பந்து வீச்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலின் மன்ரோவும், ஷ்ரேயஸ் ஐயரும் இணைந்தனர். கோலின் மன்ரோ அதிரடியாக விளையாடினார். அதன் பிறகு மன்ரோ 40 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி ஸ்ரேயஸ் ஐயருடன் ஜோடி சேந்தார்.

இந்த ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு ஷ்ரேயஸ் ஐயர் 45 (40) ரன்களில் ஆட்டமிழக்க அதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட்டும் 23 (19) ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த கிறிஸ் மோரிஸ் 4, கீமோ பால் 7, என அடுத்தடுத்து ஆட்டமிழக்க 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழந்து 155 ரன்கள் குவித்தது.

அக்சர் பட்டேல் 14* ரன்களிலும், ககிசோ ரபாடா  2* ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது 3 விக்கெட்டுகளும், புவனேஸ்வர் குமார் 2 விக்கெட்டுகளும், அபிஷேக் சர்மா, ரஷித் கான் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 156 ரன்கள் இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

Categories

Tech |