Categories
கிரிக்கெட் விளையாட்டு

மீண்டும் புயலாக உருவெடுத்த ரஸல்…… தொடர் தோல்வியில் பெங்களூரு அணி ….!!

கொல்கத்தா அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

12ஆவது ஐ.பி.எல் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 17 வது லீக் போட்டியில் நேற்று  8 மணிக்கு பெங்களூரு சின்னச்சாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 205 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி  84 (49) ரன்கள்( 9 பவுண்டரி 2 சிக்ஸர்) விளாசினார். டிவில்லியர்ஸ் 63 (32) ரன்கள் (5 பவுண்டரி, 4 சிக்ஸர்) விளாசினார். ஸ்டோய்னிஸ் 28 (13), ரன்களும், பார்த்திவ் பட்டேல் 25 (24) ரன்களும் குவித்தனர்.

பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர். சுனில் நரேன் 10 ரன்னில் ஆட்டமிழக்க அதன் பின் வந்த உத்தப்பாவும், கிறிஸ் லின்னும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதன் பிறகு உத்தப்பா 33 (25)  ரன்களில் ஆட்டமிக்க  அதை தொடர்ந்து கிறிஸ் லின் 43 (31) ரன்களிளும், நிதிஷ் ராணா 37 (23) ஆட்டமிழந்தனர். அதன் பிறகு தினேஷ் கார்த்திக்கும், ஆண்ட்ரே ரஸலும்  ஜோடி சேர்ந்தனர். தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு நிலவியது. அதன் பிறகு ஆண்ட்ரே ரஸல் புயலாக மாறினார்.

பெங்களூரு அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட டிம் சவூதி வீசிய  19 ஓவரை தாறுமாறாக தாக்கினார். அந்த ஓவரில் 29 ரன்கள் எடுத்து வெற்றியை கொல்கத்தா பக்கம் திருப்பினார். அதன் பிறகு கடைசி ஓவரில் 1 ரன்கள் தேவைப்ப்பட  கொல்கத்தா அணி 19.1 ஓவரில்5 விக்கெட் இழந்து 206 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. ஆண்ட்ரே ரஸல் 13 பந்துகளில் 48 ரன்களுடனும் (7 சிக்ஸர் 1 பவுண்டரி), சுப்மன் கில் 3 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  பெங்களூரு அணியில் அதிகபட்சமாக பவான் நேகி, சைனி ஆகியோர் தலா  2 விக்கெட்டுகளும், சாஹல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Categories

Tech |