கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்துள்ளது
ஐ.பி.எல் 29 வது லீக் தொடரில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கியது இந்நிலையில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.
கிறிஸ் லின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அதன் பிறகு சுனில் நரேன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பிறகு வந்த நித்திஷ் ராணா 21, ராபின் உத்தப்பா 0, என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இருந்தாலும் அதிரடியாக கிறிஸ் லின் விளையாடினார். அதன் பின் கிறிஸ்லின் 82 (51) ரன்களில் இம்ரான் தாஹிர் பந்து ஆட்டமிழந்தார் . அதன் பின் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆண்ட்ரே ரஸெல் 10 ரன்கள் எடுத்தநிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு தினேஷ் கார்த்திக் 18, சுப்மன் கில் 15,ரன்கள் எடுக்க 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 161 ரன்கள் குவித்தது. பியூஸ் சாவ்லா 4* ரன்னிலும், குல்தீப் யாதவ் 0* ரன்னிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டுகளும், மிச்செல் சான்டனர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இதையடுத்து சென்னை அணி களமிறங்கி விளையாடி வருகிறது.