Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலத்தை மீட்டு தர வேண்டும்… கலெக்டர் அலுவலகத்தில் முதியவர் செய்த செயல்… சிகிச்சை பலனின்றி பலி…!!

நிலத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் சிக்கலை அடுத்துள்ள தொட்டியபட்டி பகுதியில் அமல்ராஜ் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அங்கு காம்பவுண்ட் காட்டியதால் நிலத்தை மீட்டு தரக்கோரி அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் எந்த பதிலும் அளிக்காததால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமல்ராஜ் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த அங்கிருந்த காவல்துறையினர் உடனடியாக முதியவரை மீட்டு சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் முதியவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |