கொரோனா பாதிப்பால் கம்போடியாவில் இதுவரை 3,028 பேர் பாதிக்கப்பட்டு 23 பேர் பலியாகி உள்ள நிலையில், புதிதாக 113 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய மத வழிபாட்டுத் தலமாக”அங்கோர்வாட்” ஆலயம் கம்போடியாவில் திகழ்கின்றது. இதனின் மொத்த பரப்பளவு 162.6 எக்டேர் அளவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாட்டுப் பயணிகளும் வந்து வழிபடுகிறார்கள். அதுமட்டுமின்றி முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் திகழ்கின்றது. இங்கு பல்லாயிரம் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் இந்த ஆலயத்திற்கு மக்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் கொரோனா பாதிப்பு இரண்டாவது அலையாக அதிகரித்து வருவதால் உலக நாடுகள் முழுவதும் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர்.ஆசிய நாடான கம்போடியாவிலும் கொரோனா பரவல் அதிவேகமாக பரவி கொண்டு வருகின்றது. இங்கு கொரோனாவால் இதுவரை 3,028 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றுவரை 23 பேர் கொரோனா வைரஸ் நோயால் பலியாகியுள்ளனர்.
தற்போது கம்போடியாவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருவதால் அதனை தடுக்க அந்நாட்டு அரசு பலத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியான “அங்கோர் வாட்”ஆலயத்துக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதித்துள்ளது. வருகின்ற 20 ஆம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்று கம்போடியாவின் தொல்லியல் துறை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.