Categories
அரசியல் ஆன்மிகம் காஞ்சிபுரம்

“அத்திவரதர்” சயன கோலத்தின் கடைசி நாள்… தொண்டர்களுடன் OPS தரிசனம்..!!

காஞ்சிபுர அத்திவரதரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் O.பன்னீர் செல்வம் தனது தொண்டர்களுடன் சென்று தரிசனம் செய்தார்.

காஞ்சிபுரத்தில் 40 நாள்கள் நடைபெறும் அத்திவரதர் உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டமும் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் அத்திவரதரை தரிசிக்க தொடர்ந்து வருகை தருகின்றனர்.

Image result for பன்னீர் செல்வம்

இந்நிலையில் அத்திவரதரின் சயன கோல காட்சி இன்றுடன் நிறைவடைய இருப்பதால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அத்திவரதரை தரிசனம் செய்தார். இவருடன் ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் உடனிருந்து அத்திவரதரை தரிசனம் செய்தனர். மேலும் இன்று மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காலை முதலே தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |