Categories
சினிமா தமிழ் சினிமா

சூப்பர் ஸ்டாருக்காக எஸ்.பி.பி பாடிய கடைசி பாடல்… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

சூப்பர் ஸ்டாருக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் எப்போது வெளியாகும் என்ற தகவல் தெரியவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர். கடந்த விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் அண்ணாத்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் 25-ஆம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. குறிப்பாக மறைந்த பாடகர் எஸ்.பி.பி அவர்கள் ரஜினிக்காக பாடிய கடைசி பாடல் என்பதால் அவரது முதல் வருட நினைவு தினத்தை முன்னிட்டு இப் பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |