Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சட்டத்தை திரும்ப பெறவேண்டும்… மீனவர்களுக்கு பாதிப்பை விளைவிக்கும்… கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…!!

ராமநாதபுரத்தில் மத்திய அரசை கண்டித்து சி.ஐ.டி.யூ கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் சி.ஐ.டி.யூ. கடல்சார் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டுவரஉள்ள இந்திய கடல்வள மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியுள்ளனர். இந்த சட்டம் மீனவர்களுக்கு எதிரான சட்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்த சட்டத்தை கொண்டுவரக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடல் சார் தொழிலாளர் சங்கத்தின் தாலுகா செயலாளர் ஜேம்ஸ் ஜஸ்டின் தலைமை தங்கியுள்ளார். இதனையடுத்து மாவட்ட செயலாளர் கருணாமூர்த்தி, மாவட்ட பொருளாளர் சுடலைக்காசி,  தர்மராஜ், பஞ்சா, காட்டுமாரி மற்றும் ஓலைக்குடா கிராம நிர்வாகிகள் சகாயராஜ், அருளானந்தம் உள்ளிட்ட பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மேலும் அவர்கள் கடலில் இறங்கி போராடியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |