பட்ட பகலில் வக்கீல் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள நன்செய் இடையாறு பகுதியில் பார்த்திபன் என்பவர் அவரது மனைவி மோகனபிரியாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பார்த்திபன் வக்கீலாகவும், மோகனபிரியா கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகின்றனர். இதனையடுத்து சம்பவத்தன்று இவர்கள் இருவரும் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக நமகல்லுக்கு சென்றுள்ளனர். இதனை அறிந்த மர்மநபர்கள் பார்த்திபன் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 30,000 ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
இதற்குப்பின் வீட்டிற்கு திரும்பி சென்ற பார்த்திபன் வீட்டின் பூட்டு மற்றும் பீரோ உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக பரமத்திவேலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து திருடிய மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பட்ட பகலில் மர்மநபர்கள் வீட்டில் நுழைந்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.