Categories
மாநில செய்திகள்

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர்… இத்தனை நாட்களா…?

குளிர்கால சட்டப்பேரவை கூட்டம் தமிழகத்தில் 4 நாட்கள் நடைபெற இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா காலகட்டத்தில் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்த நேரத்தில் அரசியல் கூட்டங்கள், பிரச்சாரக் கூட்டங்கள் போன்றவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தற்பொழுது நான்காம் கட்ட ஊரடங்களில் பல்வேறு தளர்வுகளை அறிவித்திருக்கும் அரசு, பொதுக் கட்டங்கள் கூட்டுவதற்கு முக்கிய நடைமுறைகளை பின்பற்றி பொதுக் கூட்டங்களை வழி நடத்தலாம் என தெரிவித்திருக்கிறது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா பாதிப்பு காரணமாக கலைவாணர் அரங்கில் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளதாக கூறப்படும் நிலையில், மறைந்த எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல், கொரோனா பற்றிய சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம், 110 விதியின் கீழ் முதலமைச்சரின் புதிய அறிவிப்புகள் ஆகியவை இந்த கூட்டத்தொடரில் இடம் பெற்று முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகின்றது.மேலும் இந்த, கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக, எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளருடன் சபாநாயகர் ஆலோசனை நடத்துவதாக கூறப்படும் நிலையில், சட்டப்பேரவை கூட்டத்தொடர் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |