Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம இராசிக்கு… “வேலைப்பளு குறையும்”… பொருள் வரத்து அதிகரிக்கும்.!!

மன உறுதியுடன் காரியங்களை எதிர்கொள்ளும் சிம்மராசி அன்பர்களே..!! நிதானத்துடன் செயல்படுவதால் நல்ல பலன்கள் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாகவே இருக்கும். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு தகுந்த சிகிச்சை உதவும். வெளியூர் பயணத்தில் மாறுதல்களை செய்வீர்கள். இன்று புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க சிரமங்கள் குறையும். வேலைப்பளு குறைந்து காணப்படுவீர்கள். வீட்டை விட்டு வெளியே தங்கக் கூடிய சூழல் இருக்கும். திடீர் செலவு கொஞ்சம் உண்டாகும். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உண்டாகும். உங்கள் வாழ்வில் முன்னேற்றம் காண முழு முயற்சியுடன் செயல்படுவீர்கள்.

பொருள் வரத்து அதிகரிக்கும். வாகனம் பூமி மூலம் நல்ல லாபம் இருக்கும். இன்று மனம் மகிழ்வான சம்பவங்கள் இல்லத்தில் நடக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்ளுங்கள். அது போலவே நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது பல விதமான காரியங்களில் ஈடுபடும் பொழுது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். முடிந்தால் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்று நாளை தொடங்குவது சிறப்பு.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : கிழக்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |