கோவை வனப்பகுதியை ஒட்டியுள்ள மக்களை மிரட்டி வந்த சிறுத்தை வனத்துறையினரால் கூண்டுக்குள் பிடிபட்டுள்ளது.
கோவை மாவட்டம் மதுக்கரை வனப்பகுதியை ஒட்டியுள்ள குவாரி ஆபீஸ், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 21ஆம் தேதி குவாரி ஆபீசுக்கு பக்கத்தில் நள்ளிரவில் வந்த சிறுத்தை ஒன்று காம்பவுண்ட் சுவரின் மீது ஏறி அமர்ந்துள்ளது. அத்துடன் சீனிவாசன் என்பவர் வளர்த்த நாயையும் நாயையும் வேட்டையாட முயன்றுள்ளது. இதையடுத்து அந்த நாய் தொடர்ந்து கத்திய போது அந்த சிறுத்தை நாயை விட்டு விட்டு சென்றுள்ளது. இதன் பின்னர் அந்த பகுதியில் உள்ள ஆட்டோ பட்டிக்குள் சிறுத்தை 4 ஆடுகளை கடித்து குத்தறியுள்ளது.
இதனால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்றும் வனத்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதையடுத்து சுற்றித்திரியும் சிறுத்தையை வனதுறையினர் கூண்டு வைத்து பிடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் சிறுத்தை பிடிபட்டுள்ளது. இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹடா வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.