Categories
மாநில செய்திகள்

போட்டோ எடுத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய சிறுத்தை… படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை..!!

மேற்கு வங்க மாநிலத்தில் காயங்களுடன் மயங்கிக் கிடந்த சிறுத்தையை படம் பிடித்தவர்களை சிறுத்தை விரட்டி விரட்டி தாக்கியது.

மேற்குவங்கம் அலிப்புர்துவார் என்ற இடத்தில் வனப்பகுதியில் இருந்து காயங்களுடன் தப்பி வந்த சிறுத்தை ஒன்று சாலையோரத்தில் படுத்து கிடந்தது. அப்போது அவ்வவழியாக வந்த பொதுமக்கள் சிறுத்தையை செல்போனில் படம் பிடித்தனர். அப்பொழுது விழித்துப் பார்த்த அந்த சிறுத்தை திடீரென கூட்டத்தினரை நோக்கி பாய்ந்தது.

Image result for The leopard that struck the man

அந்நேரம் தன்னிடம் சிக்கிய ஒருவரை சிறுத்தை பயங்கரமாக தாக்கியது. சிறுத்தை  பயங்கர காயம் மற்றும் சோர்வுடன் இருந்ததால் மீண்டும் களைப்புடன் படுத்துவிட்டது. இதனால் தாக்கப்பட்ட நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பி தற்பொழுது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories

Tech |