Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகை அளித்த கடிதம்…. பூரிப்படைந்த வனிதா…. வைரலாகும் பதிவு…!!!

பிரபல நடிகை வனிதாவிற்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

பிரபல நடிகை வனிதா குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் பிரபலமானார். இதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் வனிதா தற்போது அழகானது காதல் 2கே, அனல் காற்று, அந்தகன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை வனிதாவுக்கு ரசிகை ஒருவர் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், மிஸ் கார்ஜியஸ். டியர் வனிதா அக்கா, நான் பார்த்ததிலேயே நீங்கள் ரொம்பவே ஸ்ட்ராங்கான மற்றும் அழகான ஆத்மா.

நான் எப்போதும் அட்மையர் பண்ணும் ஆத்மாவும் நீங்கள்தான். தொடர்ந்து செல்லுங்கள் என்பதைதான் உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன் என்று எழுதியுள்ளார். இக்கடிதத்தை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Categories

Tech |