Categories
அரசியல்

விடுதலை சிறுத்தை கட்சிக்கு மோதிரம் சின்னம் இல்லை….. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!

விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தலைமை தேர்தல் ஆணையம் தமிழநாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது . தமிழகத்தை பொறுத்தவரை திமுக , அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி ஒப்பந்தம் ஏறக்குறைய முடிவாகி இறுதி செய்யப்பட்டு விட்டது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சிக்கு மோதிரம் சின்னத்தை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே  கோரிக்கை வைத்து மனு அளித்தது.

இதையடுத்து  நேற்று இந்தியா முழுவதும் 39 அங்கீகாரம் வழங்கப்படாத கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சின்னம் வழங்கியது . அதாவது அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கு தேர்தல் ஆணையமே சின்னம் ஒதுக்கும் . ஒரு கட்சி பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெற வேண்டு மென்றால் குறிப்பிட்ட சதவீதம் வாக்கு பெற்று இருக்க வேண்டும் . கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்தால்  விருப்பபட்ட  சின்னத்தை கேட்கலாம் .  அந்த வகையில் நேற்று இந்திய தேர்தல் ஆணையம் விடுதலை சிறுத்தை கட்சி கோரிய மோதிரம் சின்னத்தை தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

Categories

Tech |