வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியர்கள் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 79 பில்லியன் டாலர்கள் தொகையை இந்தியாவிற்கு அனுப்பியுள்ளனர்.
மேலும் அந்த புள்ளி விவரத்தில் , 2016ஆம் ஆண்டில் இந்த தொகை 62.7 பில்லியன் டாலர்க _ளாகவும், 2017ஆம் ஆண்டில் 65.3 பில்லியன் டாலர்களாக இருந்த இந்த தொகை 2018_ஆம் ஆண்டில் 14 சதவீதமாக அதிகரித்துள்ளதாக உலக வங்கி வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கின்றது. கேரளாவில் ஏற்றப்பட்ட கனமழை-வெள்ளத்தால் அம்மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிவோர் தங்கள் குடும்பத்திற்கு அதிக தொகை அனுப்பியது இந்த உயர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நாடுகளின் வரிசை :
இந்த அளவிட்டில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக ,
67 பில்லியன் டாலர்கள் அனுப்பப்பட்ட சீனாவும் ,
36 பில்லியன்கள் டாலர்கள் தொகையைப் பெற்று மெக்சிகோ 3_ஆவது இடத்திலும் ,
பிலிப்பைன்ஸ் 34 பில்லியன் தொகையை கொண்டு 4_ஆவது இடத்திலும் ,
எகிப்து 29 பில்லியன் தொகையுடன் 5_ஆவது இடத்திலும் உள்ளது.
இந்தியர்கள் சுமார் 79 பில்லியன் தொகை இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ 54,94,84,50,00,000.00 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.