Categories
தேசிய செய்திகள்

கொரோனாவை முன்பே கணித்த குட்டி ஜோதிடர்… குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா வைரஸ் பற்றி கடந்த ஆண்டே சரியாக கணித்து சொன்ன குட்டி ஜோதிடருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. 

கொரோனா வைரஸ் பற்றிய பல செய்திகள் வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, வாட்சப்பில் ஒரு ஜோதிடர் பிரபலமாகியிருக்கிறார். இன்று நம் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே முடக்கி வைத்திருக்கும் கொரோனா வைரஸை 2019 ஆம் ஆண்டிலேயே சரியாக கணித்து கூறியவர் தான் அபிக்யா ஆனந்த் (Abhigya). கர்நாடகாவைச் சேர்ந்த இவர் 2006 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவரது தந்தை பெயர் ஆனந்த் ராமசுப்ரமணியன் மற்றும் தாய் அனு ஆனந்த். அபிக்யாவிற்கு, அபிக்தியா என்ற தங்கை இருக்கிறார். அபிக்யா ஆன்மிகத்தில் அதிக நாட்டமுள்ளவர். ஆகையால் சிறுவயதில் இருந்தே அது சார்பான பல படிப்புகளை ஆர்வமாக படித்தார். வேதங்களை கற்று உணர்ந்த அபிக்யா, இதிகாசங்களையும் ஆர்வமாக படித்து வருகிறார்.

Abhigya Anand Wiki, Biography, Age, Prediction Videos, Images ...

இவர் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து ‘கான்சைன்ஸ்’ (conscienc) என்ற யூ-டியூப் சேனலை உருவாக்கி நிர்வகித்து வருகின்றார். அதில் கிரகப்பெயர்ச்சி, ராசி பலன், ஜோதிட விஷயங்களை கணித்து ஆதாரப்பூர்வமாக பேசுவது, சிறுவன் அபிக்யாவின் ஸ்டைல். அப்படித்தான், கடந்த ஆண்டு ஆகஸ்ட்  மாதம் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், 2020 ஆம் ஆண்டின் கிரக நிலைகளையும், அதனால் ஏற்படப் போகும் விளைவுகளையும் விளக்கியிருந்தார்.

கொரோனா வைரஸ் பற்றியும் அந்த வீடியோவில் சொல்லப்பட்டிருந்தது. கொரோனா வைரஸோடு சேர்த்து, உலக பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கும் என்று முன்பே கணித்துவிட்டார். அதோடு கொரோனா வைரஸ் மே 29 ஆம் தேதி கட்டுக்குள் வந்துவிடும் எனவும் கூறியிருக்கிறார்.

இந்த குட்டி ஜோதிடருக்கு முன்பே பல பாராட்டுகளும், விருதுகளும் கிடைத்திருக்கின்றன. 2015 ஆம் ஆண்டு பகவத் கீதா விருதும், 2016 ஆம் ஆண்டு ஸ்லோகா பிரவீனா விருதும், ஸ்பந்தன்ஸ்ரீ விருதும் கிடைத்தது. தற்போது இவர் தான் டிரெண்டிங்கில் இருக்கிறார்.  இந்த குட்டி ஜோதிடரின் யூ-டியூப் சேனலை இன்று ஏராளமானோர் பாலோவ் பண்ண தொடங்கி உள்ளனர்.

Categories

Tech |