சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கு வரும் ஒன்றாம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை அயனாவரத்தில் இருக்கக்கூடிய ஒரு தனியார் குடியிருப்பு வளாகத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 17 பேரை போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட இவர்கள் 17 பேருக்கும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இன்னும் சிறையில் தான் இருக்கிறார்கள். 17 பேருக்கான வழக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 17 பேருக்கும் எதிராக 120 ஆவணங்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட இருக்கிறது. அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் இந்த தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பிப்ரவரி 1ம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருக்கிறார்.