Categories
மாநில செய்திகள்

மக்களவை தேர்தல் 5 மணி நிலவரப்படி 63.73% …. இடைத்தேர்தல் 5 மணி நிலவரப்படி 67.08% – சத்ய பிரதா சாஹூ தகவல்…!!  

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகளும், இடைதேர்தளுக்கான வாக்குப்பதிவு   67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார். 

தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவும், 18 சட்டப்பேரவை‌த் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்  வாக்குப்பதிவு  இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். இதில் சினிமா பிரபலங்கள்  பலரும், அரசியல் கட்சி  தலைவர்களும் தங்கள் வாக்கினை செலுத்தினர். இதனிடையே தமிழகத்தில் சில இடங்களில் கோளாறு ஏற்பட்ட வாக்கு பதிவு இயந்திரம் மாற்றப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்றது.

 

இந்நிலையில் வாக்கு பதிவு குறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தமிழகத்தில் மக்களவை தேர்தல் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 63.73% வாக்குகள் பதிவாகி உள்ளதாகவும், 18 சட்ட பேரவை தொகுதிகளுக்கான இடை தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 5 மணி நிலவரப்படி 67.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்    அதிகபட்சமாக சிதம்பரம் தொகுதியில்  70.73% வாக்கு பதிவும், குறைந்த பட்சம் கன்னியாகுமரி தொகுதியில் 55.07% வாக்கு பதிவும் பதிவானதாக தெரிவித்தார். மேலும் பெரிய வன்முறை ஏதும் நடக்கவில்லை என்றும், 2 அல்லது 3 இடங்களில் வேட்பாளர்களுக்குள் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் அவர்  தெரிவித்தார்.

 

Categories

Tech |