Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அங்க இருந்து நல்லா தான் வந்துட்டிருந்துச்சு… எதிர்ப்பாராமல் நடந்த விபத்து… சாலையில் போக்குவரத்து பாதிப்பு…!!

சாலையில் சென்று கொண்டிருந்த லாரி எதிர்பாரா விதமாக விபத்து ஏற்பட்டு 2 ஓட்டுநர்களும் படுகாயம் அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கணவாய் பகுதியின் வழியில் மும்பையிலிருந்து துணி லோடு ஏற்றி கொண்டு லாரி ஒன்று வந்துள்ளது. இந்த லாரியை மேட்டுப்பாளையம் பகுதியில் வசிக்கும் ஓட்டுநர் வேல்முருகேசன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதில் அவருடன் அதே பகுதியில் வசிக்கும் மாற்று ஓட்டுனராக ராமராசு என்பவர் உடன் வந்துள்ளார். அப்போது கணவாயில் அமைந்திருக்கும் வளைவில் வந்து கொண்டிருக்கும் போது ஓட்டுநரின் செயல்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சாலையில் ஓடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் 2 பேரும் படுகாயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் இதைப் பற்றி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அருகில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 ஓட்டுனர்களையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதில் அங்கு அவர்களுக்கு மருத்துவர் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. அதன்பின் சாலையில் கிடந்த லாரியை கிரேன் எயந்திரத்தின் மூலமாக அப்புறப்படுத்தி காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |