Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவையில் பரபரப்பு…காதல் தோல்வியால் தூக்கில் தொங்கிய மாணவன்…!!

கோவை வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நேபாள நாட்டு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மருதமலை சாலையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் சர்வதேச மாணவர்களுக்கான விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தங்கி பயின்று வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து விடுதிக் காப்பாளர் கணேசன் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில்,

Image result for தூக்கில் தொங்கி

உயிரிழந்த மாணவர் நேபாள நாட்டைச் சேர்ந்த சந்தோஷ் என்பதும் 26 வயதான இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயிர் நோயியல் துறையில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்ததும் தெரியவந்தது. தனது ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை சந்தோஷ் காதலித்து வந்ததாகவும், காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த ஆர்எஸ் புரம் காவல்துறையினர் விடுதி மாணவர்கள் காப்பாளர் ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |