Categories
உலக செய்திகள் வைரல்

முதலாளி வந்ததை கவனிக்காம…. “டண்டணக்கா.. டணக்குணக்கா”…. நடன சூறாவளியாக மாறிய பணிப்பெண்….!!

தென்கொரியாவில் பணிப்பெண் ஒருவர் முதலாளி வந்ததை கூட கவனிக்காமல் “ஏ டண்டணக்கா.. டணக்குணக்கா” என்று குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்கொரியாவில் இளம்பெண் ஒருவர் தேநீர் விடுதியில் தனியாக தரையைத் துடைத்து கொண்டிருந்தார். பின்னர் கையில் இருந்த துடைப்பானை கீழே போட்டு விட்டு பின்னணியில் ஒலித்த பிரபல பாப் பாடலுக்கு “ஏ டண்டனக்கா… டணக்குனக்கா” என்று சூறாவளி வேகத்தில் நடனமாடியுள்ளார். மேலும் முதலாளி கதவைத்திறந்து உள்ளே வருவதை கூட கவனிக்காமல் அந்தப் இளம்பெண் நடனத்தில் மூழ்கியிருந்தார்.

https://twitter.com/i/status/1470494052420304903

இதையடுத்து ஒரு கட்டத்தில் திடீரென்று முதலாளி நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தலையை குணிந்தபடி தரையில் கிடந்த துடைப்பானை கையில் எடுத்துள்ளார். ஆனால் அந்த முதலாளி சிறிதும் அந்த இளம்பெண் மீது கோபத்தை காட்டாமல் அவருடைய நடனத்தை பாராட்டி கை தட்யுள்ளார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களோ முதலாளியின் செயலை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |