Categories
பல்சுவை வரலாற்றில் இன்று

திருகார்த்திகை தீபம் அன்று கட்டாயம் ஏற்ற வேண்டிய முக்கிய 3 விளக்குகள்…..!!

திருக்கார்த்திகை தீபம் அன்று பூஜை அறையில் ஏற்ற வேண்டிய முக்கியமான மூன்று விளக்குகள் அது என்ன அப்படிங்கறத பத்தி பார்க்கலாம்

திருக்கார்த்திகை தீபம் அப்படின்னா நாம வீடுகளில் நிறைய விளக்குகளை ஏற்றி வைப்போம்.அதே மாதிரி வாசல் , பின்வாசல் இது மாதிரி நிறைய இடங்களில் வந்து விளக்குகளை ஏற்றிவைத்து வழக்கமான ஒன்று . அதே மாதிரி பூஜை அறையில் நாம முக்கியமான மூன்று விளக்குகள் ஏற்ற வேண்டும். அது என்ன அப்படிங்கறத பார்க்கலாம்.திருக்கார்த்திகை தீபம் அன்னைக்கு வீட்டின்  நிலை வாசல் , கதவு எல்லாத்தையுமே நல்லா சுத்தம் பண்ணி , கழுவி நிலை வாசலுக்கு மஞ்சள் , குங்குமமிட்டு , மாக்கோலம் போட வேண்டும். பின்னர் நிலை வாசலுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அடுத்ததா நம்ம பூஜையறையில் ஏற்ற வேண்டிய விளக்குகளை ஏற்ற வேண்டும்.

பூஜையறையில் ஏற்ற வேண்டிய முதல் விளக்கு தீபம் கல் உப்பு தீபம். இந்த கல் உப்பு தீபத்துக்கு ஒரு கிண்ணம் கல் உப்பு எடுத்துக் கொள்ளணும். அதில் ஒரு காலியான அகல்விளக்கு வச்சி அதுக்கு மேலே எண்ணெய் ஊற்றி , மஞ்சள் , குங்குமம் வச்ச ஒரு அகல்விளக்கை மேல வச்சி தீபத்தை ஏற்றி வைக்கவும். இந்த கல் உப்பு தீபம் நம்ம எதுக்கு ஏற்றுகின்றோம் என்றால் சகல செல்வமும் பெறனும் , எப்பவுமே வந்து அள்ள அள்ள குறையாத அளவிற்கு பணம் பெருக வேண்டும் என்பதற்காக நாம கல் உப்பு தீபம் ஏற்று கின்றோம். இந்த தீபத்தை வந்து திருகார்த்திகை அன்னைக்கு மட்டும் ஏற்றமும்னு கிடையாது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாம பூஜையறையில் ஏற்றி வழிபட்டு வந்தால் நமக்கு சகல செல்வங்களும் கிட்டும் அப்படிங்கிறது ஐதீகம்.

அடுத்த விளக்கு பாத்தீங்கன்னா அரிசியில் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். அரிசில நாம வந்து தீபம் ஏற்றி வைத்தால் நம்ம வீடுகள்ல என்னைக்குமே உணவிற்கு பஞ்சம் இருக்கக்கூடாது என்பதற்காக நாம் ஏற்ற வேண்டிய விளக்கு அரிசி தீபம். அதுக்கு அடுத்த விளக்கு பாத்திங்கனா பருப்புல நாம தீப ஏற்ற வேண்டும். இது எதற்க்குனு பார்த்தீங்கன்னா நம்ம வீட்டில் தானியங்கள் என்னைக்குமே குறைவில்லாமல் இருக்கணும் அப்படிங்கிற தற்காக ஏற்ற வேண்டிய தீபம் தானிய தீபம். இதுமாதிரி திருக்கார்த்திகை தீபம் அன்னைக்கு பூஜை அறையில் 3 விளக்குகள் ஏற்றி வழிபட்டு வந்தீங்கன்னா நாம வீடுகள்ல என்னைக்குமே செல்வத்திற்கும், உணவிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.

Categories

Tech |