ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் இயக்கத்தின் முக்கிய தளபதி ரியாஸ் சுட்டுக்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
காஷ்மீரில் பயங்கரவாத ஊடுருவல் அதிகரித்து வருவதால் மூன்று தனித்தனி பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் ஜம்மு காஷ்மீர் போலீசார் முடுக்கிவிடப்பட்டன. அதில், ராணுவத்தால் தேடப்பட்டுவந்த முக்கிய பயங்கரவாதிகளில் ஒருவரும், பயங்கரவாதக் குழுவின் தளபதியுமான ஹிஸ்புல் முஜாஹிதீன் இன்று காலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த மோதலின் போது கொல்லப்பட்டான்.
அதேபோல, மாவட்ட பாம்பூர் பகுதியின் ஷர்ஷாலி கிராமத்தில் நடந்த மற்றொரு மோதலில் மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இன்று காலை, ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது அருகில் இருந்த சுமார் 10 மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இது குறித்து, காவல்துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் எஸ்.பி. வைட் கூறுகையில், கடந்த ஜூலை 2016-ல் நடந்த ஒரு மோதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஹிஸ்புல் தலைவர் புர்ஹான் வானிக்கு பின்னர் ரியாஸ் நாய்கூ மிகவும் முக்கியமாக தேடப்பட்டு வந்த பயங்கரவாதியாக இருந்தான்” என தெரிவித்தார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியதாவது, ” இளம் காஷ்மீர் ஆண்களை பயங்கரவாதத்தில் சேர்ப்பதில் நாய்கூ ஒரு முக்கிய நபராக இருந்துள்ளான், மேலும் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரிகளை ராஜினாமா செய்ய அச்சுறுத்தியது உள்ளிட்ட பல வழக்குகளிலும் இவன் ஈடுபட்டுள்ளான் என தெரிவித்துள்ளனர்.