அமெரிக்காவில் குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கொன்றவழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் கடந்த 2002-ஆம் ஆண்டு ஆபேல் ஓச்சோவா (Abel Ochoa) என்ற நபர் ஒருவர் கொகைன் போதை மருந்துக்கு அடிமையானதால் தனது மனைவி மற்றும் 2 மகள்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்று விட்டான். மேலும் மாமனார், மைத்துனி ஆகியோரையும் கொலை செய்தான். இதையடுத்து அவன் மனைவியின் காரில் தப்பிச் சென்று கொண்டிருந்தான்.
அப்போது வழிமறித்த போலீஸார் அவனை துப்பாக்கியால் சுட்டு கைது செய்தனர். இந்த வழக்கில் அந்த கொடூரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஹன்ட்ஸ்வில்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவனுக்கு நேற்று விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.