அமெரிக்காவில் குதிரையுடன் தவறான உறவு வைத்ததாக சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஆற்றில் குதித்து தப்பிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள கொலராடோ மாகாணத்தில் Jonah Barrett-Lesko என்ற 25 வயது இளைஞர் நள்ளிரவு நேரத்தில், மைதானம் ஒன்றில் குதிரையுடன் தவறான உறவில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. மேலும் அவர் பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் என்பதும் தெரியவந்ததால், காவல்துறையினர், அவரை கொலராடோ மாகாணத்தின் தென்மேற்கு பகுதியில் இருக்கும் லா பிளாட்டா கவுண்டி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, Jonah, சிறையில் இருந்து தப்பிவிட்டார். எனினும் சிறிது நேரத்தில் சிறையின் அருகிலிருக்கும் கடையின் வழியே கைதிகள் அணியக்கூடிய ஆடையுடன் ஒரு நபர் சென்று கொண்டிருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர், Jonah தான் என்று அறிந்த காவல்துறையினர், தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். அடுத்த சில நிமிடங்களில், அவர் காட்டுப்பகுதியில் மறைந்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. காவல்துறையினர் அங்கு சென்றபோது, அங்கிருந்த, அனிமாஸ் என்ற நதியில் குதித்து தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளார். எனினும் காவல்துறையினர் தொடர்ந்து போராடி சுற்றி வளைத்து அவரை பிடித்து விட்டனர்.