பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்து விட்டனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்ன வதம்பச்சேரி பகுதியில் லோகநாயகி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மொபட்டில் அம்மன் நகர் பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது இவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் திடீரென லோகநாயகி அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனை அடுத்து லோகநாயகியின் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து திருட முயற்சித்த நபரை பிடித்து அடித்தனர். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த சுல்தான்பேட்டை காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருச்சி மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் வசித்து வரும் ராஜேந்திரன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்து விட்டனர்.