இறுதிச் சடங்கு நடக்கும் வேலையில் கல்லறையில் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் கல்லறையில் கொலை செய்யப்பட்ட நபர் ஒருவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது. அச்சமயம் திடீரென எல்டன் என்பவர் துப்பாக்கியுடன் நுழைந்து கல்லறையை நோக்கி துப்பாக்கிச் சூடு மேற்கொண்டார். அதுமட்டுமன்றி உனக்குத் தகுதியான விஷயத்தை தான் நீ அடைந்துள்ளாய் எனவும் அந்த நபர் கத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்து அச்சத்துடன் நின்றிருந்தனர்.
பின்னர் அந்த எல்டன் அவர்களை நோக்கி தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியை காட்டி விட்டு பின்னர் அங்கிருந்து ஓடிவிட்டார். தகவலறிந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தற்போது நீதிபதிகள் தண்டனை அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கறிஞர் கூறுகையில், “துப்பாக்கியுடன் கல்லறையில் நுழைந்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவே அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை சரியானது” என கூறியுள்ளார்.